அறிமுகம்

வணக்கம்.

தம்மைப் பற்றி தாமே எழுதுவதென்பது எளிதல்ல. என் எந்த இடுகையை விடவும் இதை எழுதுவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். பின்னர் படித்துப் பார்த்ததில் ஒன்றுமே எழுதவில்லை என்று புரிந்தது! பின்னாட்களில் விரிவாக எழுத முயல்கிறேன். இப்போதைக்கு:

ஜெகதீசன் என்னும் நான் பிறந்து வளர்ந்தது திருப்பூரில். பள்ளிப் படிப்பை முடித்ததும் பலரைப் போலவே கணிணி மோகம் கொண்டு கோயமுத்தூரில் உள்ள VLB ஜானகி அம்மாள் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் பயின்றேன் [1998-2002]. பின்பு ஜெர்மனியில் Otto-von-Guericke Universität Magdeburg என்னும் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றேன் [2005].

இரண்டு வருடம் ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொருளாலனாக வேலை செய்துவிட்டு 2007ல் தாயகம் திரும்பினேன். 2008 முதல் 2014 வரை சென்னையிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் திறந்த மூல மென்பொருள் திணைக்களத்தில் தொழில் நுட்ப மேலாளராக பணி செய்தேன். 2015 முதல் கோயமுத்தூரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதே பணியைச் செய்யவிருக்கிறேன்.

மனைவியின் பெயர் லீலா(வதி). தஞ்சாவூர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் MBBS பயின்று தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாற்றுகிறார். இரண்டு குழந்தைகள், அர்ஜுன் மற்றும் அரவிந்த்.

எனது எண்ண நிகழ்வுகளின் தொகுப்பாகவும் காலவாகனமாகவும் இத்தளத்தை உபயோகிக்க முற்படுகிறேன். இதுவரைக்கும் என் எண்ணங்களை தொகுப்பாக அமைத்ததில்லை. எனவே உரைநடையும், நடைமுறையும், குறை இலக்கியமும் கலந்த கலவையாகவுமே இருக்கக்கூடும்.

ஒரு முழுச்சோம்பேறியாகிய என்னால் இயல்கிற சுறுசுறுப்பு போக போகத்தான் எனக்கே தெரியும்!

குறையிருப்பின் குறியிடுக, கருத்திருப்பின் பரிமாறுக.

நன்றி.

Advertisements