நான் சொல்வதெல்லாம் உண்மை

“உன் வயசென்ன தம்பி?”

பதினொன்னு.

“எந்த க்ளாஸ் படிக்கிற?”

ஆறாவது.

“உனக்கு எதாச்சும் பிரச்சனையா?”

அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.

“இத பாருப்பா, உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் எங்ககிட்ட சொல்லலாம். அத சரி செய்யத்தான் நாங்க இருக்கோம். அப்படி நீ சொல்லலைன்னா அது உன் வாழ்க்கையையே சீரழிச்சுடும், புரியுதா?”

பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லீங்க.

“அப்புறம் ஏன் அப்படிப் பண்ணினே?”

தெரியாம பண்ணிட்டேங்க. இனிமேல் பண்ண மாட்டேன்.

“ம்ம்… போலீஸ்னா ரொம்ப பயமா?”

இல்லீங்க.

“ஜெயில்னா என்னான்னு தெரியுமா?”

“சொல்லு தம்பி, ஜெயில்னா என்னான்னு தெரியுமா?”

தெரியுங்க.

“என்ன?”

தப்பு பண்ணினவங்களுக்கு எல்லாம் அங்கதான் தண்டனை கொடுப்பாங்க.

“யாரு தண்டனை கொடுப்பா?”

போலீஸ்.

“என்ன மாதிரி தண்டனை கொடுப்பாங்க?”

தெரியலை.

“நல்லா யோசிச்சுப் பாரு, கேள்விப்பட்டிருப்ப இல்லியா”

ரூமுக்குள்ள அடைச்சு வச்சு குச்சியால அடிப்பாங்க.

“அப்புறம்?”

நகத்தை எல்லாம் புடுங்கி டெய்லியும் வெயில்ல நிக்க வைப்பாங்க.

“வேற?”

பயங்கரமா அடிப்பாங்க.

“நீ ஜெயிலுக்குப் போகணுமா?”

ம்ஹூம்.

“நீ பண்ணினது மத்த விஷயம் மாதிரி சின்னது இல்லை. நீ ஏன் அப்படி செஞ்சேன்னு சொல்லித்தான் ஆகணும். சொல்லாட்டி ஜெயிலுக்குத்தான் போகணும்”

தினேஷ் அண்ணன்தானுங்க அதெல்லாம் முடியாதுன்னு பெட் கட்டினார், அதான் செஞ்சேனுங்க.

“தினேஷ் யாரு, உன்னோட ஸ்கூல்ல படிக்கிறவனா?”

பக்கத்து வீட்டுல இருக்கிற அண்ணன்.

“அவர் என்ன பண்றார்?”

தெரியல. அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவேன். அவரும் அவரோட ஃப்ரெண்ட் மட்டும்தான் இருப்பார்.

“நீ எதுக்கு அவர் வீட்டுக்குப் போவே?”

நிறைய புக்ஸ் வச்சிருப்பார். படிக்கிறதுக்காகப் போவேன்.

“என்ன மாதிரி புக்ஸ் எல்லாம் படிப்ப?”

காமிக்ஸ் புக்ஸ், சிறுவர் மலர் புக்ஸ்.

“அது மட்டும்தானா?”

ம்ம்.

“நான் முதல்லயே சொல்லியிருக்கேன். நாம் பேச அரம்பிக்கும்போது சத்தியம் பண்ணினே இல்லையா?”

ம்ம்.

“அது என்ன புக்னு தெரியுமா?”

பகவத் கீதை.

“என்னன்னு சத்தியம் செஞ்சே?”

நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை-னு சொன்னேன்.

“ம்ம்.. உண்மைய சொன்னா உனக்கு உதவி பண்ணுவோம். இல்லைன்னா ஜெயிலுக்குத்தான் போகணும். இப்ப சொல்லு, அந்த வீட்ல என்ன இருந்தது, உனக்கு என்ன நடந்தது?”

நான் எதுவுமே பண்ணலைங்க. தினேஷ் அண்ணன்தான் அசிங்கமான புக்ஸை எல்லாம் குடுத்து படிக்கச் சொன்னார். நான் மாட்டேன்னுதான் சொன்னேன், அவர்தான் ஆம்பளைன்னா இதெல்லாம் படிக்கணும்னு சொன்னார். அதனாலதாங்க படிச்சேன்.

“கடைசியா போனப்ப என்ன நடந்தது?”

புதுசா ஒரு புக் வந்திருக்கு படிடான்னு கொடுத்தார். நான் பாத்துகிட்டு இருக்கும்போதே பக்கத்துல வந்து உக்காந்துட்டு தப்பு தப்பா நடந்துகிட்டார். நான் எந்திருச்சு போக எவ்வளவோ முயற்சி செஞ்சேன். அவர்தான் இதெல்லாம் இல்லைன்னா உன்னைய எவனுமே ஆம்பளையா மதிக்க மாட்டான். சின்ன பையனாவேதான் இருப்பேன்னு சொன்னார்.

“நீ கடைசியா படிச்ச புக் இதானே?”

நானா படிக்கலீங்க. அவர் சொல்லித்தான் படிச்சேன்.

“இந்த புக் படிச்சுட்டு அதுல வர்ற மாதிரி ஸ்கூல் பொண்ணுகிட்ட நடந்துகிட்ட, இல்லியா? அந்த பொண்ணு எந்த க்ளாஸ் படிக்குது?”

நாலாவது.

“நீ அப்படி பண்ணும்போது அந்தப் பொண்ணு சத்தம் போடலியா?”

வாயை அமுக்கி புடிச்சுக்கிட்டேன். அந்த புக்ல அந்த மாதிரிதான் போட்டிருந்தது.

“சரி நீ போகலாம்”

***

பதினொரு வயது சிறுவன் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதில் சிறுமியின் உடலெங்கும் இரத்தக்காயங்கள் ஏற்பட்டதுடன் பெண்ணுறுப்பில் அறுவை சிகிச்சை பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

இது ஒரு விபத்தல்ல. நோய். அறியாமையால் உருவான நோய். செக்ஸ் கல்வி பனிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை போலவும் பதின்பருவத்தினருக்கு முறையான உறவு, ஒழுக்கம், பழக்கவழக்கம் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன. அது முட்டுச்சந்தில் வைத்து விற்கப்படுகிற செக்ஸ் புக் இல்லையென்பதை நாம் எப்போது உணர்வோம்?

மதம் பிடித்துப்போன அரசியலவாதிகளுக்கு பயந்துகொண்டும் பழமைவாதிகளின் பிடிகளுக்குள் மாட்டிக்கொண்டும் செக்ஸ் கல்வி மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.

***

4 thoughts on “நான் சொல்வதெல்லாம் உண்மை

 1. ponnakk

  செக்ஸ் கல்வி என்பது செக்ஸைத் தூண்டும் விதமாக அமையகூடாதல்லவா? பெண் குழந்தைகளிடையே ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்ப்படுத்தவேண்டுமே தவிர…what is what…. என்று உணர்வை தூண்டுவதாக இருக்ககூடாது…

  இதற்கு பதிலாக தாயே பெண் குழந்தைகளிடம் போதிக்கலாம், மேலோட்டமாக… பசங்களிடம் இப்படித்தான் இருக்கவேண்டும்…
  இந்த இந்த இடத்தில் தொடவோ நெருங்கவோ அனுமதிக்ககூடாது…. மொத்ததில்…. keep away from the boys… என்று மெதுவாக புரிகிறமாதிரி சொல்லலாமே….

  girls school…..னா ஒகே…co-education school… என்றால் எல்லாம் தலைகீழாக மாற இடம் உண்டு… அதனால் sex eduction at school level… தேவைதானா என்று பார்க்கவேண்டும்… பெண் குழந்தைளின் தகப்பன்மார்களிடம் கேட்டுப் பாருங்களேன்.

  Reply
 2. jaggybala Post author

  பாலுணர்ச்சியைத் தூண்டும் விதமாக செக்ஸ் கல்வி இருக்க வாய்ப்பில்லை. அம்மா சொல்லி மகள் கேட்பதாயிருந்தால் எல்லா விஷயங்களுமே அப்படி அமையலாமே? அம்மாக்கள் முடிந்தவரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், காலம் காலமாய். எனக்கென்னவோ அவர்களுக்கு செக்ஸைப் பற்றி சொல்லித்தருமளவு விவரமும் அறிவும் குறைவென்றே தோன்றுகிறது.

  தவிர, அம்மா இல்லாத குழந்தைகள் என்ன செய்வார்கள்? பிறகு ஆண் குழந்தைகளுக்கு யார்? எப்படி? இக்கேள்விகளுக்கும் உங்கள் கேள்விகளுக்குமே பதில் செக்ஸ் கல்வியில்தான் இருக்க முடியும்.

  பெண் குழந்தைகளைப் பெற்ற தகப்பன்களை கேட்டுத்தான் செக்ஸ் கல்வி பெறவேண்டும் என்றால் அது ஆணாதிக்கமே. வாத்ஸாயனார் இருந்தால் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்.

  எனக்கு பெண் குழந்தை பிறந்து பதினெட்டு வயதுவரை Boyfriend இல்லாமல் வளர்ந்தால் நிச்சயம் மருத்துவரிடம் கூட்டிச்செல்வேன்.

  Reply
 3. jaggybala Post author

  நான் கூறிய அனைத்தும் என் கருத்துக்கள் மட்டுமே. இதை சரியென்றும் தவறென்றும் பிரிப்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

  குழந்தைகளின் மீது நாம் வைத்திருக்கும் அன்பும் அரவணைப்பும் அவர்கள் சுதந்திரத்தையோ சுயத்தையோ தாழ்த்திவிடக்கூடாது என்பதே என் எண்ணம். பொறுப்புள்ள தந்தைகளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு பல பெண்கள் கூண்டுக்கிளிகளாய் வாழ்வதை நாம் அன்றாட வாழ்விலேயே காணலாம்.

  உதாரணமாக, உங்கள் பெண்ணிற்கு ஒரு ‘நல்ல மாப்பிள்ளை’ அல்லது ‘நாசாவில் வேலை’ என்று வந்தால் பலரின் மனம் ‘நல்ல மாப்பிள்ளையையே’ நோக்கி நகரும்! அந்த ‘நல்ல மாப்பிள்ளை’ என்னும் நிலையை ஒரு பெண் தாமாய் எடுக்க ஊக்குவிப்பது மட்டுமே தந்தையின் கடமை.

  சுதந்திரம் அளவுக்கதிகமாய்ப் போனால் என்ன ஆகுமோ என்று யப்படுவது நியாயமானதே. அது எந்த தகப்பனுக்கும் பொருந்தும். சுதந்திரத்தின் அளவுகோல் வயதையும் அறிவையும் மட்டுமே சார்ந்ததாக இருக்க வேண்டும். மற்றபடி, ஆணுக்கு ஒருவித கட்டுப்பாட்டையும் பெண்ணிற்கு வேறுவிதமான கட்டுப்பாட்டையும் விதிப்பது ஆணாதிக்கம் என்றே படுகிறது.

  Boyfriend கலாச்சாரம் பற்றி என் மனைவியிடம் மட்டுமல்ல, என் நண்பர்கள் குடும்பத்தினர் உட்பட பலரிடம் விவாதித்திருக்கிறேன். ஒரு மனநோயாளியைப் போல என்னைப் பார்த்தார்கள் என்பதே உண்மை. கடந்த சில நூற்றாண்டுகளாக மட்டுமே இப்படிப் போயிருக்கிறோம். புராணத்தில் கூட தலைவன் தலைவி என்றிருந்ததே தவிர கணவன் மனைவி என்றி்லை. அர்த்தநாரீஸ்வரரை வணங்குவோம், அவர் அம்சம் புரியாமலேயே. காதல் காமம் ஓவியங்கள் இல்லாத இந்துக் கோவில்கள் எங்கேனும் உண்டா?

  உலகுக்கே காமசாஸ்திரம் தந்த தேசத்தில் காமம் பற்றி பேசுவதோ படிப்பதோ தீமையா? எனக்கிருப்பது முற்போக்கு/மூட சிந்தனை என்று எண்ணிணால், நம் மூதாதையருக்கு அது பல மடங்கு அதிகமாய் இருந்திருக்கிறது.

  காமத்தில் மூழ்கித் திளைக்க வேண்டும் என்பதல்ல என் வாதம், உணர்ந்து தெளிய வேண்டும் என்பதே.

  ஜெ

  Reply
 4. Prakash

  அண்ணா,

  பெரும்பாலானா மெத்தப்படித்த மேதாவிகள், sex education என்பதை ஏதோ வகுப்பறையில் வைத்து உடலுறவுக்கு தயார் செய்வது என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறர்கள்.இதற்கு முதலில் பெரியவர்களுக்குத்தான் அது ப்ற்றிய விழழிப்புணர்வு தேவை.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s