ஓ ஈசா… என் ஈசா

சென்ற மாதம் ஒரு முஸ்லீம் சகதொழிலாளியுடன் பேசிக் கொண்டிருந்தேன். ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பதாகச் சொன்னார். மதநம்பிக்கைகளை என் மனம் விரும்பியதில்லை என்றாலும் ஆர்வம் உண்டு. எதற்காக அந்த நோன்பு என்று கேட்டேன். ஏழைகளின் பசியை உணர்வதற்காக என்று சொன்னார்.

சுவாரஸ்யமாய் ரம்ஜான் நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து ஆராய்ந்தேன். குடிக்கக்கூடாது, முத்தமிடக்கூடாது, வாந்தி எடுக்கக்கூடாது, மாதவிடாய் கூடாது என்று ஆயிரம் கூடாதுகள் இருந்தன. ம்ஹூம், எதிலும் உடன்பாடில்லை. நோன்பிற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் “ஏழைகளின் பசியை உணர்தல்” என்பது மிகப்பெரிய செயலல்லவா?

எளிமையையும் ஏழ்மையையும் கற்றுக்கொண்டால் பொறாமையும் அகங்காரமும் மறைந்துவிடும். ரம்ஜான் நோன்பாய் இல்லாமல் ஒரு வைராக்கியமாக நானும் மதிய உணவைத் தவிர்க்க முடிவுசெய்தேன்.

காலையும் இரவும் நல்லா வெட்டிட்டு மதியம் சாப்பிடாமல் இருப்பது பெரிய காரியமா என்று நினைத்தீர்களேயானால், ஆமாம் என்றுதான் சொல்லுவேன். முதல் நாளன்றே வயிற்றில் கடமுட சத்தம் ஆரம்பித்துவிட்டது. மாலை நான்கு மணிக்கெல்லாம் மயக்கம் வருவது போல் இருந்தது. நீராகாரம் கூட குடிக்கக்கூடாது என்றார்கள். முடியவில்லை. தலைசுற்றி விழுந்துவிடுவது போலிருந்தது. காபி குடித்தேன்.

வார இறுதி நாட்களை விடுத்து கிட்டத்தட்ட இருபத்தொரு நாட்கள் மதிய உணவைத் தவிர்த்திருக்கிறேன். தினமும் காலை ஒன்பது மணிக்கு இரண்டு இட்லி/பூரி ஒரு தோசை. மதியம் ஒரு காபி. இரவு ஒன்பது மணிக்கு இரண்டு பரோட்டா ஒரு தோசை. இடையில் வேறெதுவும் இல்லை. சென்னை உணவகங்களில் தோசை என்பது இட்லி சைசிற்கே இருக்கும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. பூரி கச்சாயம் சைசில் இருக்கும்.

இந்நாட்களில், ஏழைகளின் பசியை உணர்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் பசி என்றால் என்னவென்று கொஞ்சமாய் உணர்ந்திருக்கிறேன். முதல் ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் பின்னர் பழகிவிடும் என்றெண்ணி கஷ்டப்பட்டு இருந்துவிட்டேன். நினைத்ததைப் போலவே இரண்டாவது வாரம் பழகிவிட்டது. பசியின்மை அல்ல, பசியைத் தாங்கும் குணம். பசி அப்படியேதான் இருக்கிறது.

ஹோண்டா சிட்டியில் ரேபன் கண்ணாடியணிந்து செல்லும் கனவான்களே, நீங்கள் பசியடங்கிய பின் ஒதுக்கும் ஒரு பிட்சா துண்டின் காசில் சராசரி இந்தியனின் குடும்பம் ஒரு வாரம் சாப்பிடும். உங்களைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை, அன்னம் தண்ணீருக்கு மரியாதை கொடுங்கள் என்கிறேன். பசித்துத் தெருவில் வாழ்பவனும் உன்னைப் போன்ற ஒரு சகமனிதன் தான்.

இன்று திருப்பூர் செல்கிறேன். சனி ஞாயிறு சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். திங்கட்கிழமையுடன் ரம்ஜான் நோன்பு முடிகிறது. ஆனாலும், இன்னும் சில நாட்கள் மதிய உணவைத் தவிர்க்கலாமென்று இருக்கிறேன். டயட், டிடர்மினேஷன் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

எல்லாம் சரி, இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கறீர்களா? ஈசனுக்கு ஈத் திருவிழா என்றால் கேட்கக் குளிர்ச்சியாய் இருக்கிறதே! தவிர, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் “ஓ ஈசா… என் ஈசா…” என்னும் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். உணர்ச்சிப் பிழம்பாய் இருக்கிறது.

3 thoughts on “ஓ ஈசா… என் ஈசா

  1. ponnakk

    என‌க்கு தெரிந்து திருச்சியில் ஒரு ஆசிரியை ப‌ணியில் இருக்கும் ஒரு அம்மாள் த‌ன் குடும்ப‌ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து சில‌ ஏரியாவில் இருக்கும் ம‌ன‌ம் பிறழ்ந்த‌ ம‌னித‌ர்க‌ட்கு ம‌திய‌ உண‌வு வ‌ழ‌ங்குகிறார். இன்னும் ஒருவ‌ர் பாங்கில் இருக்கிறார். அவ‌ரும் த‌னிம‌னித‌னாக‌ இதைபோல‌ செய்கிறார்… ஒரு அட்வ‌கேட் அன்பாலய‌ம் ந‌ட‌த்துகிறார்…இப்ப‌டியும் சில‌ர்…

    >> எளிமையையும் ஏழ்மையையும் கற்றுக்கொண்டால் பொறாமையும் அகங்காரமும் மறைந்துவிடும்.
    ம‌றைய‌ வேண்டும்… பின்புதான் ம‌னித‌னாக‌ வாழ‌முடியும்… வெறும‌னே க‌ட‌வுள் ப‌க்தி என்ப‌து ஒன்றும் இல்லை…

    Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s