ஆட்டோகிராஃப் ஆட்டம்

இது ஒரு விளையாட்டாக இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது, நண்பர் கணேஷின் அழைப்பிற்கு நன்றி. பிற்காலத்தில் படிக்கப் பிடிக்கும் என்று கருதியும் எழுதுகிறேன்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதன்முதலில் என்னை Jaggy என்று என் கல்லூரித் தோழி ஹேமா அழைத்ததாக ஞாபகம். கல்லூரி முடிக்கையில் தந்தை பெயரான பாலகிருஷ்ணனில் பாதியை எடுத்து JaggyBala என்று மின்னஞ்சல் வைத்துக்கொண்டிருந்தேன். நாளடைவில் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நெடுநாளைக்குப்பின் சமீபத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் பார்த்தேன். அதில் குழந்தையை தத்தெடுக்க முடியாமல் மாதவன் தவித்து நிற்கையில் A.R.ரஹ்மானின் இசையில் மெய்மறந்தழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னுடைய கையெழுத்து ஒரே மாதிரியாக இருப்பதில்லை! சிலசமயம் பிடிக்கும். சிலசமயம் பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
பெரும்பாலான தென்னிந்திய உணவுவகைகள் பிடிக்கும். மெக்சிகன், தாய்லாந்து, பிட்ஸா வகைகளும் பிடிக்கும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நிச்சயம் முடியாது. நான் புரிந்துகொள்ளவும் என்னைப் புரிந்துகொள்ளவும் சில நாட்களாவது பிடிக்கும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமாஅருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி! பார்ப்பதற்கு வேண்டுமானால் கடல் அழகென்று நினைக்கிறேன்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள். நெடுநாள் முயற்சிக்குப் பின் வந்திருக்கும் நல்ல பழக்கம் இது.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: நான் நானாக இருக்க ஆசைப்படுவது.
பிடிக்காதது: நான் நானாக இருக்க முடியாதது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது, ‘அனுசரித்தல்’ என்னும் வார்த்தையின் அர்த்தம் அவள்.

பிடிக்காதது என்றெதுவும் இல்லை, இருந்தாலும் சொல்லப்போவதில்லை!

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு பேண்ட், சிவப்பு சட்டை. சத்தியமாக தி.மு.க. ஆசாமி அல்ல.

12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றுமில்லை.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு.

14.பிடித்த மணம்?
மல்லிகை. கூந்தலில் இருக்கும்போது!

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நான் அழைக்க விரும்பும் நபர்கள் வலைப்பதிவல்லாதவர்கள் 😦

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?
கவிதைப் பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட், சதுரங்கம்.

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை, என்று சொல்ல ஆசை.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
கமல்ஹாசன் வகை திரைப்படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
Pan’s Labyrinth. தமிழில் – பசங்க.

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கொற்றவை – ஜெயமோகன்.

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
விருப்பத்தைப் பொறுத்தது. மாதம் ஒருமுறை என்று சொல்லலாம்.

24.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அமைதி. ஆர்ப்பாட்டம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இது நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டியது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஜாதி.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அலட்சிய குணம்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
சுவிட்சர்லாந்து.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சினம் ஆறிய ரௌத்திரனாக.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
இதுவரைக்கும் எதுவுமில்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
இருப்பதிலும் இயல்வதிலும் இன்பம் கொண்டால் அதுவே சிறந்த வாழ்வு.

5 thoughts on “ஆட்டோகிராஃப் ஆட்டம்

 1. தீப்பெட்டி

  அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி..

  //இருப்பதிலும் இயல்வதிலும் இன்பம் கொண்டால் அதுவே சிறந்த வாழ்வு//

  வாழ்விற்கான சிறந்த வரி.. (நான் எதிர்பார்க்கவில்லை?!)

  Reply
 2. jaggybala

  வருக சாத்தூர்க்காரரே 😉

  பார்த்து, எனது வலைத்தளத்தையும் பற்ற வைத்துவிடாதீர்கள்.

  Reply
 3. ponnakk

  உங்களின் ஜெர்மன் செல்லும் பதிவு படித்தேன்.. திகில் படம் பார்க்கும் உணர்வு..உங்களின் அந்த சூழ்நிலை உங்களின் பதற்ட்டம் எல்லாம் நாமே அங்கே நின்றால் போன்ற பதற்றம்…உங்களின் அந்த நிற்கதி அற்ற நிலமை நன்றாக புரிந்தது…நீங்கள் பத்திரமாக செல்லும் வரை பதற்றம்… அருமையாக வடித்திருந்தீர்களோ..

  // இது ஏக்கம். எனக்கு கிடைத்தது ஏன் எங்களூர் சுப்பனுக்கும் குப்பனுக்கும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம். நாகரிக மக்களைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக உழைப்பவன் அவன். அவர்களுக்குத் தேவை சமநியதி. அது காந்திய வழியில் வந்தாலும் சரி, சேகுவேராவின் வழியில் வந்தாலும் சரி. //

  உண்மையில் உங்க‌ளின் ச‌முக‌ நோக்கு… சக‌ம‌னித‌னின் நிலையை அந்த‌ சூழ்நிலையிலும் நினைத்து பார்த்த‌ உங்க‌ளின் உய‌ர்ந்த‌ வுள்ள‌ம்..என்னை க‌வ‌ர்ந்த‌து….

  // ஓ, யெஸ். சொல்றா. எப்ப ஜெர்மனிக்கு வர்றே?”

  அதிர்ந்து போய்விட்டேன். “டேய், நான் ஃப்ராங்ஃபர்ட்ல தான்டா இருக்கேன். இப்பதான் வந்தேன்”

  “நீ அடுத்த வாரம் தானே வர்றேன்னு சொன்னே?”

  அவன் இருப்பது ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில். இப்போதே மணி பத்து. பயத்தில் உளறினேன். //

  நானும் தான் அதிர்ந்த்தேன்…

  Reply
 4. jaggybala Post author

  ponnakk,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வந்து செல்லுங்கள் 🙂

  ஜெகதீசன்.

  Reply
 5. ponnakk

  கன்னத்தில் முத்தமிட்டால் படம் …நானும் பார்த்தேன்… மிகவும் டச்சிங்காக இருந்தது…

  பிடித்தது: நான் நானாக இருக்க ஆசைப்படுவது.
  பிடிக்காதது: நான் நானாக இருக்க முடியாதது.

  இது எல்லோருக்கும் பொருந்தும்… நாம் நாமாக‌ இருக்க‌ முடியாது… நாமும் ந‌டிக்கிறோம் என்று தெரிந்தும் தெரியாம‌லும்…ந‌டித்து கொண்டுத்தான் இருக்கிறோம்.. அத‌னால்தான் வாழ்க்கை ஒரு நாட‌க‌ மேடை என்கிறார்க‌ளோ

  பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?..

  பிடித்த சத்தம் அமைதி… என்று பதில் அளித்துள்ளீர்கள்.. அழகான கற்ப்பனை..அமைதியே ஒரு சத்தமாக வர்ணிக்கப்படுகிறது..

  ஆர்ப்பாட்டம்.
  நிஜம் தான்…
  எனக்கு பிடிக்காத ஒன்று..

  நிச்சியமாக்…இன்றும் எனக்கு பிடித்தது அமைதி…27.
  உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
  ஜாதி. …. ஜாதி அது ஒரு கொடுமை…அதுவும் தென்மாவ‌ட்ட‌ம் வ‌ந்து பாருங்க‌.. ஜாதி எதிர்ப்பு குர‌ல் சோ..கால்டு..உய‌ர்ந்தா ஜாதினரிட‌ம் இருந்து குர‌ல் வர வேண்டும்… நாட்டின் வ‌ள‌ர்ச்சியை பாதிக்கும் ஒரு பின்ன‌டைவு..

  இருப்பதிலும் இயல்வதிலும் இன்பம் கொண்டால் அதுவே சிறந்த வாழ்வு.

  முத்தாய்ப்பாக‌….

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s