ஏழாம் உலகத்தில் கடவுள்

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்டது பாலாவின் நான் கடவுள். நாவல் முழுக்க முழுக்க‌ ஊனமுற்ற பிச்சைக்காரர்களை (உருப்படிகளை) மையமாக கொண்டது. அதற்குள் கடவுளை கொண்டு வந்ததாலோ என்னவோ நாவலின் தாக்கததை திரைப்படம் ஏற்படுத்தவில்லை. இது அந்நாவலை படித்தவர்களுக்கு புரிந்திருக்கும், படிக்க முனைபவர்களுக்கு புரியும். எனினும் பாத்திர படைப்புகளிலும் நேர்த்தியான காட்சி அமைப்புகளாலும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவது உண்மை.

கதை புதிது. களம் புதிது. பண்டமாற்று முறையை போல உருப்படிகளை மாற்றிக்கொள்வதும், பிச்சையெடுக்க வகுப்புகள் எடுப்பதுமாக மனித மனத்தின் அதிர்வுகளையும், ருத்ரன் ரௌத்ரனாக மாறி வேட்டையாடும் பொழுது உக்கிரமத்தையும் பதிவு செய்கிறது. பிச்சைக்காரர்களின் வாழ்முறை நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது ரசிக்கத்தக்கது. நயன்தாராவாக வேடமிட்டு ஆடும்போது எம்.ஜி.ஆர் தாடையை தடவியபடி உதட்டை பிதுக்கி தலையை வெட்டென ஆட்டுவ‌தும், சிவாஜி உடம்பை லேசாக‌ குலுக்கிய‌படி கண்களை மட்டும் மேலே நோக்கி ரசிப்பதுமாக ஜெயமோகனின் நகைச்சுவை வசனங்கள் திரையில் பிரதிபலிக்கின்றன. இன்னும் அவைகளை பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பது நேர விரயம், அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

இப்படத்தை பிடிக்காதவர்களுக்கு ஒன்று அகோரிகளின் செயல்பாடுகளோ அல்லது ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் உருவ‌ அருவருப்போ மட்டுமே பிடிக்காமல் (அல்லது தாங்கமுடியாமல்) போயிருக்கும். படைப்பை அல்ல. பாலா ஒரு படைப்பாளி, அவ்வளவே. ஆன்மிகவாதியோ, அகோரியோ அல்ல. நரமாமிசம் உண்ணும் அகோரிகளின் செயல்களிலும், உருப்படிகளின் வாழ்விலும் இதை விட உக்கிரமும் உண்மையும் இருக்கும். மறுக்க முடியாது. படம் முடிந்த பிறகும் நம் கண்முன் வியாபித்திருப்பது நாகரிக உலகத்தின் மற்றுமொரு மனசாட்சி. அருவருப்புடன் கண்களை மூடிக்கொள்வ‌தால் மட்டும் இது மாறிவிடாது.

ராஜாவுக்கும் பூஜாவுக்கும் விருதுகள் காத்திருக்கின்றன. மற்றபடி, அரைமணி நேரமே வரும் ருத்ரனுக்காக‌ ஆர்யாவை மூன்று வருடங்கள் தனியுடமை ஆக்கி கொண்டது நியாயமாக படவில்லை. பாலாவின் மற்ற படங்களை ஒத்த‌ நாயகர்கள், முடிவு என இப்படமும் இருப்பது ஒருவித ஏமாற்றம்.

ஒரு ஆராய்ச்சித் தேடலின் அடிநாதத்தை உள்ளடக்கிய சினிமாவை இவ்வளவு சிறப்பாகவும் தைரியமாகவும் செய்பவர்கள் மிகச்சிலரே. பொழுது போக்கு படங்களுக்கு மத்தியில் நான் கடவுள் ஒரு பழுதுபோக்கும் படம்.

11 thoughts on “ஏழாம் உலகத்தில் கடவுள்

 1. jaggybala Post author

  அருண்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வலைப்பதிவின் வட்டத்திற்குள் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி 🙂

  ஜெகதீசன்

  Reply
 2. அன்புசிவம்

  ஜெகதீசன்,

  உன் வலைப்பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி.

  உன்னால் இவ்வளவு அழகான தமிழில் எழுத இயலும் என்பதை இப்போது தான் நான் தெரிந்துகொண்டேன்.

  சிறப்பான எண்ண ஓட்டம், நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்.

  – அன்புசிவம்

  Reply
 3. jaggybala Post author

  ஊக்கம் உற்சாகம் தர வல்லது. தங்கள் வருகைக்கும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றி அன்புசிவம் 🙂

  Reply
 4. முத்துக்குமார்

  இத்திரைக்காவியத்தின் (பாலாவின் நான் கடவுள் – காவியம் என்றுரைக்க தகுதியானதென்றே கருதுகிறேன்) தங்களுடைய கருத்தைப் பற்றி எனக்கு சில மாற்று கருத்துக்கள் உண்டென்றாலும் இக்கண்ணோட்டம் ஒரு புதிய பார்வை. சிறப்பான மொழிநடை. ஒவ்வொருவருக்குள்ளும் அபாரமான அபிரிதமான திறமைகள் நிச்சயம் உண்டென்று நான் தற்போது ஆணித்தரமாக நம்புகிறேன். என்னுடைய வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள். தங்களுடைய வலைப்பதிவுகள் மென்மேலும் வளர்ந்து சிகரம் எட்டட்டும்!

  Reply
 5. jaggybala Post author

  முத்துக்குமார் அண்ணா,

  தங்கள் கருத்துக்கு் மிக்க நன்றி 🙂

  ஜெகதீசன்.

  Reply
 6. Gokul

  ஜகதீஷ்,

  காலம் ஏற்படுத்திய நீண்ட இடைவெளியை உன் வலைப்பூ சட்டென்று குறைத்துவிட்டதை போல் உணர்ந்தேன்

  அருண் சொன்னது போல் உன் தமிழ் அருமை எனக்கு அது ஆச்சர்யம்

  தொடரட்டும் பதிவுகள்… வாழ்த்துக்கள்

  Reply
 7. Gokul

  நான் கடவுள் பற்றிய பெரும்பாலான கேள்விகளுக்கு ஜெயமோகனின் அருமையான விளக்கம் http://jeyamohan.in/?p=1869

  இந்த சுட்டி இந்த பதிவிற்கு மேலதிக தகவலாய் இருக்கும் என்று நினைக்கிறேன்

  Reply
 8. jaggybala Post author

  http://www.jeyamohan.in/?p=6873 :

  நான்கடவுளின் கருவைப்பற்றிய விவாதத்தில் முதல்முறையாக அதை பிச்சைக்காரர்களின் உலகுக்குக் கொண்டுசெல்லலாம் என்று நான் சொன்ன நாள் நினைவிலிருக்கிறது. 2005 ஆகஸ்ட் மாதம் சென்னை விஜய்பார்க் ஓட்டலில் இருந்து அந்த எளிய முன்வரைவை எழுதினேன். அந்த எண்ணம் எந்த வணிக இயக்குநருக்கும் ஒரு தயக்கத்தை அளித்திருக்கும். அது விற்கக்கூடிய ஒரு கருவே அல்ல.

  கிரீன்பார்க்கில் தங்கியிருந்த பாலா அந்த தாள்களை வாசித்துவிட்டு அதீத உற்சாகத்துடன் சோபாவில் இருந்து எழுந்து ”செஞ்சிருவோம். என்ன ஆனாலும் சரி…மயிரு, கெரியரே போனாலும் சரி, பாத்திருவோம்” என்று சொன்னார். அந்த கண்களில் தெரிந்த உற்சாகம் கொஞ்சம் கிறுக்குத்தனம் கலந்த படைப்பாளிகளுக்குரியது என இப்போது படுகிறது. அவர்களே எல்லைகளைத் தாண்டிச்செல்கிறார்கள்.

  Reply

பதில்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s