jump to navigation

தனித் தளம் April 10, 2010

Posted by jaggybala in அனுபவம், சுயபுராணம், பொது.
Tags:
trackback

வணக்கம்.

மனதில் பட்டதை சட்டென சொல்லிவிடுபவர்கள் பட்டியலில் நான் சத்தியமாக இல்லை, தண்ணி அடிக்கும்போதும் எழுதும்போதும் தவிர்த்து. என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஓம்குமார் அப்பட்டியலின் முதல்வரிசையில் இருப்பார். என் தளத்தைக் கூர்ந்து கவனிப்பவர். இருந்தாலும் நல்ல திறமைசாலி, புத்திசாலி!

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு முடித்து என் கணிணிமுன் அமர்ந்தவர் அவர் தளத்தின் (http://www.9th-direction.com/) மேம்பாடுகளைச் செய்து கொண்டே Jaggybala.com என்றொரு தளம் உபயோகத்தில் உள்ளதா என்று பார்த்தார். “சும்மா இருங்க ஓம்” என்று சொல்லி அருகிலுள்ள பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தேன். அதைக் கீழே வைப்பதற்குள் அத்தளத்தை வாங்கி, அதில் வோர்ட்ப்ரஸ்ஸை இன்ஸ்டால் செய்து கான்ஃபிகரேகஷனையும் முடித்து விட்டார்.

இரண்டு மாதங்களாய் வேலை பளு அதிகமிருப்பினும் என் சோம்பேறித்தனத்தையும் அக்கறையின்மையையும் சத்தியமாக ஒத்துக்கொள்கிறேன். பொன்னா (விஜய்) என்கிற ஒரு அன்பர் என் எழுத்துக்களைப் பற்றிய அவர் விமர்சனத்தையும் எண்ணங்களையும் பற்றி அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புபவர். அவர் கைபேசி எண்ணை வாங்கி முன்று மாதங்களாகியும் இன்றுவரை ஒரு முறை கூட அழைக்கவில்லை. இவ்வாறே பெரும்பாலான நண்பர்களிடமும், ஏன்.. மனைவியிடமும் கூட இருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து என் மனைவியை “சும்மா” பேச கைபேசியில் அழைத்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இருக்கும். இத்தனைக்கும் அவள் தஞ்சாவூரில். நான் சென்னையில். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் நான் “முழு நேர குடும்பஸ்தன்” ஆகப் போகிறேன்.

கூப்பிடக்கூடாது என்றில்லை. ஒரு மாதிரி குணம் என்று வைத்துக்கொள்ளுங்களேன், ஆனால் நிச்சயமாக அது திமிரல்ல. தவறென்று தெரியும், ஏதேனும் செய் என்று என் மனம் இன்னும் முழுமையாகக் கட்டளையிடவில்லை. என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் என்னுடன் இருந்தால் போதும் என்கிற குறுகிய இறுமாப்புடன் இருக்கிறேன். லீலா, நித்தியானந்த், சம்பத், பொன்னா… என் மற்ற நண்பர்களே, பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதான என் அன்பு உண்மையில் அலாதியானது.

இனி என் தளம் http://www.jaggybala.com/ என்னும் முகவரியில் இயங்கும்.

நன்றி.

மறுமொழிகள்»

1. soundr - April 12, 2010

wishes for the new venture

2. Nithi - April 12, 2010

I know…………….

3. Mahesh - மே 12, 2010

Eagerly awaiting your next post… u took a really long break!!! :)

4. Mahesh - மே 12, 2010

Eagerly awaiting your next post… u took a really long break!!! :) When are u planning on coming out of hibernation?!!! come back soon!!!


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.